நகராட்சி சுகாதார பணியாளர்களுக்கு பாதுகாப்பு பெட்டகம்
திருத்துறைப்பூண்டி நகராட்சி சுகாதார பணியாளர்களுக்கு பாதுகாப்பு பெட்டகம்
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் சார்பில் திருத்துறைப்பூண்டி நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு சுகாதார பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் மாவட்ட செயலாளர் வரதராஜன் தலைமை தாங்கினார். திருத்துறைப்பூண்டி முன்னாள் நகர்மன்ற தலைவர் பாண்டியன், கிளைத்தலைவர் சிவா சண்முகவடிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் கிளை செயலாளர் எடையூர் மணிமாறன் வரவேற்று பேசினார். இதில் திருத்துறைப்பூண்டி நகராட்சியில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் 30 பேருக்கு நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் சுகாதார பெட்டகங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை குழு உறுப்பினர் பொறியாளர் செல்வ கணபதி, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி செயற்குழு உறுப்பினர் அண்ணாதுரை, சர்வதேச பயிற்றுனர் பெஞ்சமின், சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி, நகராட்சி உறுப்பினர் எழிலரசன், தூய்மை பணிகள் மேற்பார்வையாளர் ஈஸ்வரன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் கணக்காளர் கீதா நன்றி கூறினார்.