பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் காவலாளி மர்ம சாவு

ஆவடி அருகே தனியார் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் காவலாளி மர்மமான முறையில் பிணமாக கிடந்தார்.
சென்னை
ஆவடியை அடுத்த முத்தாபுதுப்பேட்டை சபிநகர் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜேம்ஸ் (வயது 67). இவர், திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் காவலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பணிக்கு வந்தார். நேற்று காலை 6 மணியளவில் அவரை பணி மாற்றுவதற்காக வெங்கடேஷ் என்ற மற்றொரு காவலாளி வந்தார். அப்போது பாலிடெக்னிக் கல்லூரியின் 2-வது கேட் அருகே ஜேம்ஸ் தலையில் காயத்துடன் மர்மமான முறையில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து காவலாளியின் சாவுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story