கங்கை அம்மன் கோவிலில் செடல் திருவிழா


கங்கை அம்மன் கோவிலில் செடல் திருவிழா
x
தினத்தந்தி 17 July 2023 12:15 AM IST (Updated: 17 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் கங்கை அம்மன் கோவிலில் செடல் திருவிழா வருகிற 21-ந்தேதி நடக்கிறது

கடலூர்

கடலூர்

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் நத்தவெளிரோட்டில் அமைந்துள்ள கங்கை அம்மன் கோவிலில் 50-வது ஆண்டு செடல் திருவிழா வருகிற 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு பால்குட ஊர்வலம், மாலை 6 மணிக்கு கங்கையம்மன் ஊஞ்சல் உற்சவமும், நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை 9 மணிக்கு கணபதி பூஜை, மாலை 6 மணிக்கு சக்தி கரகம் கொண்டு வருதல், 20-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு கரகம் கொண்டு வருதல், 10.30 மணிக்கு கொடி கட்டுதல், இரவு 7 மணிக்கு அம்மன் வீதி உலா நடக்கிறது.

சிகர நிகழ்ச்சியான செடல் திருவிழா 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. அன்று காலை கரகம் கொண்டு வருதல், பகல் 12 மணிக்கு பக்தர்கள் செடல் அணிந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். இரவு அம்மன் வீதி உலா நடக்கிறது. 22-ந்தேதி (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு மஞ்சள் நீர், காப்பு களைதல், மாலை 6 மணிக்கு வராகி அம்மனுக்கு பஞ்சமி திதி அபிஷேகமும், 23-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) உதிரவாய் துடைப்புடன் விழா முடிவடைகிறது.


Next Story