விருத்தாசலம்முத்துமாரியம்மன் கோவிலில் செடல் திருவிழா
விருத்தாசலம் முத்துமாரியம்மன் கோவிலில் செடல் திருவிழா நடைபெற்றது.
விருத்தாசலம்,
விருத்தாசலம் செல்வராஜ் நகரில் முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் சித்திரை மாத செடல் திருவிழா நடைபெறுவது இதையொட்டி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பக்தர்கள் விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர் அங்கிருந்து உடம்பில் செடல் குத்தியும், காவடி, பால்குடம் எடுத்தும், தீச்சட்டி ஏந்தியும் ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு வந்து சாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.