திருப்பாதிரிப்புலியூர்முத்தாலம்மன் கோவிலில் செடல் உற்சவம்9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது


திருப்பாதிரிப்புலியூர்முத்தாலம்மன் கோவிலில் செடல் உற்சவம்9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
x
தினத்தந்தி 6 Feb 2023 12:15 AM IST (Updated: 6 Feb 2023 3:24 PM IST)
t-max-icont-min-icon

திருப்பாதிரிப்புலியூர் முத்தாலம்மன் கோவிலில் செடல் உற்சவம் 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

கடலூர்


திருப்பாதிரிப்புலியூர்,

கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் முத்தாலம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் செடல் உற்சவம் மற்றும் தேரோட்டம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டுக்கான தேரோட்டம் வருகிற 9-ந் தேதி (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி அன்று காலை 6 மணி அளவில் கோவில் கொடி மரத்தில் கொடியேற்றப்படுகிறது. பின்னர் மாலையில் அம்மன் வீதிஉலா நடக்கிறது. அதனை தொடர்ந்து தினசரி காலை, மாலை நேரத்தில் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 17-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி அன்று காலை 7 மணியளவில் சக்தி கரகம் கொண்டு வருதல் நிகழ்ச்சியும், பிற்பகல் 12 மணிக்கு செடல் உற்சவம் மற்றும் தேரோட்டம் நடக்கிறது. பின்னர் 18-ந் தேதி மஞ்சள் நீர் உற்சவம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்து வருகின்றனர்.


Next Story