விதைப்பண்ணைகளில் மாவட்ட உதவி இயக்குனர் நேரில் வந்து ஆய்வு


விதைப்பண்ணைகளில் மாவட்ட உதவி இயக்குனர் நேரில் வந்து ஆய்வு
x

விதைப்பண்ணைகளில் மாவட்ட உதவி இயக்குனர் நேரில் வந்து ஆய்வு

திருப்பூர்

முத்தூர்

முத்தூர், நத்தக்காடையூர் பகுதி விதைப்பண்ணைகளில் மாவட்ட உதவி இயக்குனர் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்.

கீழ்பவானி பாசன பகுதிகள்

திருப்பூர் மாவட்டம், முத்தூர், நத்தக்காடையூர் நகர, சுற்றுவட்டார கிராம பகுதிகளில் ஆண்டு முழுவதும் விவசாயம் சார்ந்த தொழில்கள் மிகவும் பிரதான தொழில்களாக செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து கால்வாய்கள் மூலம் கீழ்பவானி பாசன பகுதிகளுக்கு ஆண்டு தோறும் இரு பிரிவுகளாக திறந்து விடப்படும் தண்ணீரை பயன்படுத்தி மஞ்சள், கரும்பு, வாழை, நஞ்சை சம்பா நெல், எண்ணெய்வித்து பயிர்களான எள், நிலக்கடலை, சூரியகாந்தி, மரவள்ளி கிழங்கு, தோட்டக்கலை பயிர்களான மா, நெல்லி, கொய்யா, சப்போட்டா, எலுமிச்சை மற்றும் தக்காளி, கத்தரி, வெண்டை, சின்ன வெங்காயம் உட்பட பல்வேறு காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இதன்படி முத்தூர், நத்தக்காடையூர் கீழ்பவானி பாசன பகுதிகளில் விவசாயிகள் தங்களது வேளாண் ஊடு பயிர்களாக உளுந்து, பாசிப்பயிறு, தட்டைப்பயிறு உட்பட பல்வேறு பயிறு வகைகளை சாகுபடி செய்து உள்ளனர். இந்த நிலையில் முத்தூர் அருகே வேலம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட மங்களப்பட்டி மற்றும் நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டை ஊராட்சிக்குட்பட்ட குட்டப்பாளையம் கிராம பகுதிகளில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள கோ - 8 ரக பாசிப்பயறு, வி.பி.என் -8 ரக உளுந்து பயிறு, ஆதார நிலை 2 உள்ள பயறு வகைகளை விவசாயிகள் சாகுபடி செய்து விதைப்பண்ணைகளாக அமைத்து உள்ளனர்.

விதை சான்று உதவி இயக்குனர் ஆய்வு

இந்த நிலையில் முத்தூர் பகுதிகளான மங்களப்பட்டி, வேலம்பாளையம், ஊடையம் மற்றும் நத்தக்காடையூர் பகுதிகளான குட்டப்பாளையம் ஆகிய கிராம பகுதிகளில் விவசாயிகள் அமைத்து உள்ள பயிறு வகை விதைப்பண்ணைகளுக்கு மாவட்ட விதை சான்று மற்றும் அங்ககசான்று உதவி இயக்குநர் பி.அ.மாரிமுத்து நேற்று காலை நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் விவசாயிகளிடம் கூறியதாவது: கோ-8 ரக பாசிப்பயிறு 60 நாட்களில் விவசாயிகளுக்கு பலன் தரக்கூடியது ஆகும். இந்த ரகம் பாசிப்பயிறு ரகங்களிலேயே ஒரே சமயத்தில் பூத்து, காய்த்து அறுவடை செய்யும் வகையில் முதிர்ச்சி அடையும் தன்மை கொண்டதாகும்.

மேலும் உளுந்து, வி.பி.என் -8 ரக பயிறு வகைகள் மஞ்சள் தேமல் நோய், இலை சுருள் நோய் ஆகியவற்றுக்கு அதிக எதிர்ப்பு திறன் கொண்டதாகும். இதன்படி உளுந்து பயிறு 75 நாட்களில் அறுவடைக்கு தயாராகி, ஒரு ஏக்கருக்கு சராசரியாக 360 கிலோ மகசூல் தரக்கூடியது ஆகும். மேலும் பயிறு வகை சாகுபடி செய்ய உள்ள விவசாயிகள் விதைப்பண்ணைகள், வயல் தர நிலைகளில் தேர்ச்சி பெற்ற நல்ல தரமான பயிறு வகை களை விதைப் பண்ணைகளில் உற்பத்தி செய்ய முன்வர வேண்டும்.

அரசு அங்கீகாரம்

மேலும் வயல் தரத்தில் நன்கு தேர்ச்சி பெற்ற பயிறுவகை விதை குவியல்கள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு, அரசு அங்கீகாரம் வழங்கி விதை சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்படும். இதனை தொடர்ந்து விதை சுத்திகரிப்பு நிலையங்களில் விதை சான்று அலுவலர்களால் பயிறு வகை மாதிரி சேகரிக்கப்பட்டு, நல்ல தரமான விதை குவியல்களுக்கு சான்று அட்டை பொருத்தப்பட்டு தரமான விதை குவியல்களாக வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது காங்கயம் வட்ட விதை சான்று அலுவலர்



Next Story