விஷ்ணுபுரம் மகாமாரியம்மன்-மகாகாளியம்மன் கோவிலில் செடில் திருவிழா


விஷ்ணுபுரம் மகாமாரியம்மன்-மகாகாளியம்மன் கோவிலில் செடில் திருவிழா
x

விஷ்ணுபுரம் மகாமாரியம்மன்-மகாகாளியம்மன் கோவிலில் செடில் திருவிழா

திருவாரூர்

குடவாசல் அருகே விஷ்ணுபுரத்தில் மகாமாரியம்மன்-மகாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி மற்றும் செடில் திருவிழா நடைபெறுவது வழக்கம். விழாவையொட்டி கடந்த 21-ந்தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் தினமும் அம்மன் வீதி உலா நடந்தது. நேற்றுமுன்தினம் செடில் திருவிழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து காலை 11 மணிக்கு கோவில் அர்ச்சகர் வடகுடி மாலி சிவாச்சாரியார் அம்பாளுக்கு பால், பன்னீர், தேன், திரவியம், பஞ்சாமிர்தம், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்தார். பின்னர் புஷ்ப அலங்காரத்தில் சாமி வீதி உலா நடந்தது. இரவு 9 மணிக்கு கோவில் எதிரே மின் விளக்குகளால் அமைக்கப்பட்ட செடில் கம்பத்தில் ஆட்டுக்கிடாவை பொருத்தி வலம்,இடமாக 6 முறை சுற்றி இறக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் ஓம் சக்தி, பராசக்தி என கோஷங்கள் எழுப்பினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் வெங்கடேஷ், அய்யப்பன், ரமேஷ்குமார், சாமிதாசன் ஆகியோர் செய்திருந்தனர்.


Related Tags :
Next Story