விவசாயிகளுக்கு மரக்கன்றுகள்


விவசாயிகளுக்கு மரக்கன்றுகள்
x

விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

திருநெல்வேலி

இட்டமொழி:

நாங்குநேரி அருகே தளபதி சமுத்திரம் ஊராட்சி கண்டிகைபேரியில் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் பயிர் நடுதல் இலவச நாட்டு மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னோடி விவசாயி ஜெபசிங் ஜெனோ தோட்டத்தில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி நாட்டு மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. அங்குள்ள வயலில் உளுந்து பயிர்விதைகள் நடவு செய்யப்பட்டது. இயற்கை விவசாயத்தின் அரசியலை பற்றி உழவர்களுக்கு எடுத்து கூறப்பட்டது.

இதில் நாம் தமிழர் கட்சி மாநில மகளிரணி தலைவர் சத்யா மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் முருகபெருமாள், ஸ்டாலின், மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நிர்வாகி மெகுலன் ராசா செய்திருந்தார்.


Next Story