சீதளாதேவி மகாமாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா
கருவிழந்தநாதபுரம் சீதளாதேவி மகாமாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்றர்.
மயிலாடுதுறை
திருவெண்காடு:
சீர்காழியை அடுத்த கருவிழந்தநாதபுரத்தில் சீதளாதேவி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தீமிதி திருவிழா காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவையொட்டி காவிரி ஆற்றங்கரையில் இருந்து திரளான பக்தர்கள் அலகு காவடி ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். தொடர்ந்து காத்தவராயன் திருக்கல்யாணத்தை முன்னிட்டு சீதளா தேவி மாரியம்மன் காவிரி கரையில் எழுந்தருளி உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை கருவிழந்தநாதபுரம் கிராமமக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story