சீதளாமாரியம்மன் கோவில் குடமுழுக்கு
சீதளாமாரியம்மன் கோவில் குடமுழுக்கு நடந்தது
பொறையாறு
மயிலாடுதுறை மாவட்டம், பொறையாறு அருகே ஒழுகைமங்கலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற சீதளாமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று காலை 10 மணிக்கு மேல் குடமுழுக்கு நடந்தது. முன்னதாக கடந்த 5-ந் தேதி பூர்வாங்க பூஜைகளும், 7-ந் தேதி மாலை முதல் கால யாகசாலை பூஜையும் நடந்தன. தொடர்ந்து 2 மற்றும் 3-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. நேற்று காலை 4-ம் கால யாகசாலை பூஜைகள் முடிவுற்று, பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களின் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் ஆய்வாளர் பத்ரிநாராயணன், செயல் அலுவலர் முருகேசன் மற்றும் பரம்பரை நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணன், பரம்பரை அறங்காவலர்கள் ராகவன், பத்மநாபன், வெங்கட்டரங்கராஜ் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர். தரங்கம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் கமலகண்ணன், சுகாதார ஆய்வாளர் இளங்கோவன் தலைமையில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பொறையாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.