சென்னிமலையில் செயற்கை முறையில் பழுக்க வைத்த 30 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்; உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை


சென்னிமலையில் செயற்கை முறையில் பழுக்க வைத்த 30 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்; உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை
x

சென்னிமலையில் செயற்கை முறையில் பழுக்க வைத்த 30 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்; உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை

ஈரோடு

சென்னிமலை

ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாம்பழ குடோன்கள், மொத்த மாம்பழ விற்பனை கடைகள், சிறிய மாம்பழ கடைகள் மற்றும் பழ குடோன்களில் செயற்கை முறையில் ரசாயனம் மற்றும் கார்பைட் கற்கள் பயன்படுத்தி பழங்கள் பழுக்க வைக்கப்படுகிறதா? என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அதன் அடிப்படையில் சென்னிமலை வட்டார பகுதியில் செயல்பட்டு வரும் மாம்பழ குடோன்கள், மொத்த விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி நீலமேகம் ஆய்வு செய்தார். அப்போது ரசாயனம் மற்றும் கார்பைட் கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட சுமார் 30 கிலோ எடையுள்ள மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும் பழ வியாபாரிகளிடம், செயற்கை முறையில் ரசாயனம் பயன்படுத்தி பழுக்க வைக்கப்படும் பழங்களை சாப்பிடும் பொதுமக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படும். மீறி இவ்வாறு செய்தால் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006-ன் படி சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.


Next Story