காரில் கடத்த முயன்ற 1200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


காரில் கடத்த முயன்ற 1200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
x

கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற 1,200 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கன்னியாகுமரி

களியக்காவிளை:

கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற 1,200 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

தீவிர சோதனை

குமரி மாவட்டத்தில் இருந்து ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்தப்படுகிறது. இதை தடுக்க போலீசாரும், வருவாய்த்துறை அதிகாரிகளும் அடிக்கடி சோதனை நடத்தி, நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இந்தநிலையில் நேற்று அதிகாலையில் களியக்காவிளை பகுதியில் களியக்காவிளை சப்-இன்ஸ்பெக்டர் சாமி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

ரேஷன் அரிசி பறிமுதல்

அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த காரை நிறுத்தும்படி போலீசார் சைகை காட்டினர். ஆனால், டிரைவர் காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றார். உடனே, போலீசார் தங்கள் வாகனத்தில் அந்த காரை விரட்டிச் சென்றனர்.

மேக்கோடு பகுதியில் சென்றபோது டிரைவர் சாலையோரம் காரை நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டார். அதைத்தொடர்ந்து போலீசார் காரில் சோதனை செய்தபோது, அதில் சிறு, சிறு மூடைகளில் 1200 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. விசாரணையில், ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து போலீசார் காருடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். பின்னர், காரையும், ேரஷன் அரிசியையும் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அரிசியை காப்புக்காடு அரசு குடோனிலும், காரை விளவங்கோடு தாலுகா அலுவலகத்திலும் ஒப்படைத்தனர்.


Next Story