ஏரியூர் அருகே மணல் கடத்திய 2 டிராக்டர்கள் பறிமுதல்
தர்மபுரி
ஏரியூர்:
ஏரியூர் அருகே உள்ள புதூர் சோளப்பாடி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 2 டிராக்டர்கள் வந்தன. போலீசாரை கண்டதும், டிராக்டரை நிறுத்தி விட்டு டிரைவர்கள் தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து போலீசார் டிராக்டர்களில் சோதனை செய்தபோது அதில், மணல் கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார் டிராக்டர்களை பறிமுதல் செய்து, ஏரியூர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் டிராக்டர்களின் உரிமையாளர்களான மலையனூரை சேர்ந்த பழனிசாமி, புதூர் சோளப்பாடியை சேர்ந்த பழனி ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story