கஞ்சா கடத்திய 2 பேர் கைது; 12 கிலோ பறிமுதல்
தர்மபுரி
தர்மபுரி:
தர்மபுரி மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் தர்மபுரி அருகே உள்ள குண்டல்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து, அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் 12 கிலோ கஞ்சா சிக்கியது. விசாரணையில் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் வரட்டனஅள்ளியை சேர்ந்த சேட்டு (வயது 32), ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஜங்கம்டோரா கண்டேஷ் (22) என்று தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் கஞ்சாவை விற்பனைக்காக கடத்தி செல்வது உறுதியானது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சேட்டு, ஜங்கம் டோரா கண்டேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்து, 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Next Story