சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட 1 டன் குல்பி ஐஸ் பறிமுதல்


சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட 1 டன் குல்பி ஐஸ் பறிமுதல்
x
தினத்தந்தி 18 May 2023 12:15 AM IST (Updated: 18 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்வதற்காக தயாரிக்கப்பட்ட 1 டன் குல்பி ஐஸ்கிரீமை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.

மயிலாடுதுறை


மயிலாடுதுறையில் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்வதற்காக தயாரிக்கப்பட்ட 1 டன் குல்பி ஐஸ்கிரீமை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.

அதிகாரிகள் ஆய்வு

உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ரிஜிவான் அலி மற்றும் பதுருல் ஹசன் ஆகியோர் மயிலாடுதுறை ரெயிலடி பனந்தோப்பு தெருவில் கடந்த 2 ஆண்டிற்கு மேலாக வீட்டிலேயே குல்பி ஐஸ்கிரீம் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நகராட்சி துறையினர், நகராட்சி சுகாதார அலுவலர் லட்சுமி நாராயணன் தலைமையிலான நகர்நல அலுவலர் செல்வி, சுகாதார ஆய்வாளர்கள் பிச்சைமுத்து, ராமையன் ஆகியோர் கொண்ட குழுவினர் திடீரென குல்பி ஐஸ் தயாரித்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

1 டன் குல்பி ஐஸ்...

அப்போது குல்பி ஐஸ்கிரீம் தயாரிக்க உரிய அனுமதி பெறாமல் சுகாதாரமற்ற முறையில் குல்பி ஐஸ் தயாரித்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. உடனடியாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஒரு டன் குல்பி ஐஸ் மற்றும் ஐஸ் கட்டிகள், குல்பி ஐஸ் தயாரிக்க பயன்படும் மூலப் பொருட்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் உரிய அனுமதி பெறாமல் மேற்கொண்டு குல்பி ஐஸ் தயாரித்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட ஒரு டன் குல்பி ஐஸ்கிரீமை நகராட்சி குப்பை கிடங்கிற்கு எடுத்துச்சென்று அழித்தனர்.


Next Story