விற்பனைக்காக பதுக்கிய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
விற்பனைக்காக பதுக்கிய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை குடிமை பொருள் வழங்கல் குற்றபுலனாய்வு துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேம்பு தலைமையில் போலீசார் மாலையீடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு வீட்டில் ரேஷன் அரிசி விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த வீட்டில் சென்று சோதனை நடத்தினர். இதில் வீட்டின் பின் பகுதியில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் ஆயிரத்து 100 கிலோ ரேஷன் அரிசி அதில் இருந்தது. இதையடுத்து 1.1 டன் எடையிலான ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அதனை பதுக்கிய மறவப்பட்டியை சேர்ந்த நல்லுவின் மனைவி வள்ளியை (வயது 55) போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story