கந்து வட்டி வழக்கில் கைதானவரிடம் இருந்து 22 ஆவணங்கள் பறிமுதல்


கந்து வட்டி வழக்கில் கைதானவரிடம் இருந்து 22 ஆவணங்கள் பறிமுதல்
x

ஸ்ரீவைகுண்டம் அருகே கந்துவட்டி வழக்கில் கைதானவரின் வீட்டில் இருந்து 22 ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் அருகே கந்துவட்டி வழக்கில் கைதானவரின் வீட்டில் இருந்து 22 ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கந்து வட்டி வழக்கில் கைது

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கெட்டியம்மாள்புரம் பகுதியை சேர்ந்தவர் கந்தன் என்பவருடைய மகன் நம்பி (வயது 49). இவரிடம் கடன் வாங்கிய ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் கந்து வட்டி கேட்டு நம்பி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த 9-ந்தேதி ஸ்ரீவைகுண்டம் போலீசாரால் நம்பி கைது செய்யப்பட்டார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில் ஸ்ரீவைகுண்டம் துணை சூப்பிரண்டு வெங்கடேசன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் தலைமையிலான போலீசார் நம்பி வீட்டை சோதனை செய்தனர்.

ஆவணங்கள் பறிமுதல்

இதில் அவரது வீட்டில் இருந்து தொகை நிரப்பப்படாமல் கையெழுத்துக்கள் மட்டும் போடப்பட்ட 6 காசோலைகள் உள்பட 26 காசோலைகள் உள்ள ஒரு காசோலை புத்தகம், கடன் பெற்றவர்களின் 3 ஏ.டி.எம் கார்டுகள், கைரேகை மற்றும் ஸ்டாம்ப் ஒட்டப்பட்ட வெற்று பத்திரம், காசோலை மோசடி வழக்கு சம்மந்தமான ஆவணம் உள்பட 22 ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட நம்பியை ஸ்ரீவைகுண்டம் குற்றவியல் நடுவர் நீதிபதி மகாராஜன் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கந்துவட்டி குறித்து புகார் அளித்தால் உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story