கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x

வாணியம்பாடி அருகே கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பத்தூர்


திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே ஜாப்ராபாத் ஊராட்சி பகுதியிலிருந்து வெளி மாநிலத்துக்கு ரேஷன் அரிசி பதுக்கி வைத்து கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை இன்ஸ்பெக்டர் சதீஷ் குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் குற்றப்பலனாய்வுத் துறை சப்-இன்ஸ்பெக்டர் மோகன், காவலர் சதீஷ் ஆகியோர் தலைமையில் போலீசார் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர் சிலம்பரசன் தலைமையில் வருவாய்த்துறையினர் ஜாப்ராபாத் ஊராட்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாலாற்று படுகையில் உள்ள முட்புதரில் சுமார் ஒரு டன் ரேஷன் அரிசி கேட்பாரற்ற நிலையில் இருந்தது. இதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து ஜாப்ராபாத் மசூதி தெருவில் கமால் பாஷா என்பவரின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது வெளி மாநிலத்துக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த சுமார் 2 டன் ரேஷன் அரிசி மற்றும் எடை மிஷின் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட 3 டன் ரேஷன் அரிசியை வாணியம்பாடியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story