மணல் கடத்திய 4 மாட்டு வண்டிகள் பறிமுதல்


மணல் கடத்திய 4 மாட்டு வண்டிகள் பறிமுதல்
x

தூசி அருகே மணல் கடத்திய 4 மாட்டு வண்டிகள் பறிமுதல்

திருவண்ணாமலை

தூசி

தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் தூசி அருகே மடிப்பாக்கம் கிராமத்தில் செய்யாறு ஆற்றுப்படுகை ஓரம் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக 4 மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்த 4 ேபர் போலீசாரை பார்த்ததும் மாட்டு வண்டிகளை நடுரோட்டிலேயே நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டனர்.

போலீசார், 4 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.

தப்பியோடிய மடிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக், அண்ணாதுரை, மகேஷ், முருகேசன் ஆகிய 4 பேரை தேடி வருகின்றனர்.

அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story