ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 3 பேர் கைது


ஆந்திராவுக்கு  கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 3 பேர் கைது
x

ஆந்திர மாநிலத்திற்கு கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து மூன்று பேரை கைது செய்தனர்.

திருவள்ளூர்


திருவள்ளுர் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சுந்தராம்பாள் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் நந்தினி உஷா மற்றும் போலீஸார் திருவள்ளூர் - திருத்தணி சாலையில் நாராயணபுரம் கூட்ரோடில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை மடக்கி சோதனை செய்த போது ஆந்திர மாநிலத்திற்கு கடத்துவதற்காக கொண்டு செல்லப்பட்ட 4200 கிலோ ரேசன் அரிசி இருந்ததைக் கண்டுபிடித்தனர்.

இதனைத்தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தி வந்த சென்னை, வியாசர்பாடி பகுதியை சேர்ந்த பெத்தராமன் (வயது 28), சரவணன் (33), மதன் ( 21) ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்கள் வந்த வண்டியையும் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில் உள்ள ஓட்டல்களுக்கும், டிபன் கடைகளுக்கும் விற்பனை செய்ய ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் சேகரித்ததாக தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் கைப்பற்றப்பட்ட 4200 கிலோ ரேஷன் அரிசியை திருவள்ளூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைத்தனர்.


Next Story