4¾ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
வாணியம்பாடி அருகே 4¾ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பத்தூர்
வாணியம்பாடி
வேலூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் துணை சூப்பிரண்டு நந்தகுமாருக்கு ரேஷன் அரிசி கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள கருப்பனூர் கிராமத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மோகன், முதல்நிலை காவலர்கள் சதீஷ்குமார், ராஜவேல் ஆகியோர் கலைவாணி நகர் பகுதியில் கணேசன் என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர்.
அப்போது ஆந்திரா மாநிலத்திற்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 4,800 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து, நுகர்பொருள் வாணிப கழக குற்றப்புலனாய்வு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story