4 இடங்களில் பதுக்கி வைத்திருந்த 40 யூனிட் மணல் பறிமுதல்


4 இடங்களில் பதுக்கி வைத்திருந்த 40 யூனிட் மணல் பறிமுதல்
x

காட்பாடி பிரம்மபுரம் பகுதியில் 4 இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 40 யூனிட் மணலை தாசில்தார் ஜெகதீஸ்வரன் பறிமுதல் செய்தார்.

வேலூர்

காட்பாடி பிரம்மபுரம் பகுதியில் 4 இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 40 யூனிட் மணலை தாசில்தார் ஜெகதீஸ்வரன் பறிமுதல் செய்தார்.

40 யூனிட் மணல் பறிமுதல்

காட்பாடி தாலுகா பிரம்மபுரம் கோல்டன் நகர், பிரம்மபுரம் காலனி ஆகிய பகுதிகளில் உள்ள காலி மனைகளில், பாலாற்றில் இருந்து மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்து குவியல், குவியலாக குவித்து வைத்திருந்தனர். இது குறித்து காட்பாடி தாசில்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பேரில் தாசில்தார் ஜெகதீஸ்வரன் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். அப்போது சுமார் 160 மாட்டு வண்டிகளில் 40 யூனிட் மணல் கொண்டு வந்து குவித்து இருப்பது தெரியவந்தது. இதனை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் பறிமுதல் செய்த மணலை பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கோபி, ஆய்வாளர் வேலு ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.

இரவு நேரங்களில் கடத்தல்

இரவு நேரங்களில் பாலாற்றில் இருந்து மணலை மாட்டு வண்டிகளில் கடத்தி காலி நிலங்களில் பதுக்கி வைத்து, மணல் தேவைப்படுவோருக்கு விற்க வைத்திருந்தது தெரியவந்தது. மாட்டு வண்டிகளில் மணலை கடத்தி வந்து பதுக்கி வைத்்தது யார் என்பது குறித்து காட்பாடி போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story