விவசாய நிலத்தில் பதுக்கிவைத்திருந்த 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


விவசாய நிலத்தில் பதுக்கிவைத்திருந்த 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x

விவசாய நிலத்தில் பதுக்கிவைத்திருந்த 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கூரம்பாடியில் உள்ள விவசாய நிலத்தில் வெளி மாநிலத்திற்கு கடத்துவதற்காக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக உணவுப் பொருட்கள் மற்றும் குடிமைப் பொருட்கள் கடத்தல் தடுப்பு குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். சோதனையில் சிவப்பிரகாசம் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் 96 மூட்டைகளில் 5 டன் ரேஷன் அரிசி பதுக்கிவைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அரிசி மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆற்காட்டை சேர்ந்த சரக்கு ஆட்டோ டிரைவர் துரை பாண்டியன் என்பவர் ரேஷன் அரிசி மூட்டைகளை கொண்டு வந்து வைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து துரைபாண்டியன் (வயது 31), சிவப்பிரகாசம் (52) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story