வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x

ஜோலார்பேட்டை அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டையை அடுத்த கருப்பனூர் அருகே கலைவாணி நகரில், வெளிமாநிலங்களுக்கு கடத்துவதற்காக ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்துள்ளதாக மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில் குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வுத் துறை போலீசார் அடங்கிய குழுவினர் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, கணேசன் என்பவரது வீட்டில் வெளி மாநிலத்திற்கு கடத்துவதற்காக 96 மூட்டைகளில் 5 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து திருப்பத்தூர் உணவு குடோனில் ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story