பெங்களூருவில் இருந்து சின்னாளப்பட்டிக்கு சரக்கு வேனில் 575 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தல்; 2 வாலிபர்கள் கைது


பெங்களூருவில் இருந்து சின்னாளப்பட்டிக்கு சரக்கு வேனில் 575 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தல்; 2 வாலிபர்கள் கைது
x

பெங்களூருவில் இருந்து சின்னாளப்பட்டிக்கு சரக்கு வேனில் 575 கிலோ புகையிலை பொருட்கள் கடத்திய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல்லை அடுத்த சின்னாளப்பட்டிக்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஷேக்தாவூத் மற்றும் போலீசார் நேற்று சின்னாளப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது பஞ்சம்பட்டியில் உள்ள பாண்டி என்பவருக்கு சொந்தமான கடைக்கு சந்தேகப்படும் வகையில் சரக்கு வேன் ஒன்று வந்தது. இதனை பார்த்த போலீசார் அந்த சரக்கு வேனை சோதனை செய்தனர். அப்போது அதில் 575 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து சரக்கு வேனில் வந்த 2 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் அவர்கள், சேலத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 30), பெங்களூருவை சேர்ந்த ராகேஷ் (24) என்பதும், பெங்களூருவில் இருந்து புகையிலை பொருட்களை விற்பனைக்காக பாண்டியின் கடைக்கு கொண்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 575 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் சரக்கு வேனை பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக பாண்டி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story