குளத்து மண் அள்ளிய டிப்பர் லாரி பறிமுதல்; டிரைவர் கைது


குளத்து மண் அள்ளிய டிப்பர் லாரி பறிமுதல்; டிரைவர் கைது
x

குளத்து மண் அள்ளிய டிப்பர் லாரி பறிமுதல்; டிரைவர் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை

வடகாடு அருகே ஆவணம் கைகாட்டி பகுதியில் டிப்பர் லாரியில் குளத்து மண் அள்ளி வரப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் அப்பகுதியில் வடகாடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சேந்தன்குடி பெரியாத்தால் ஊரணி பகுதியில் இருந்து, டிப்பர் லாரியில் மண் அள்ளி வந்த செரியலூர் இனாம் பகுதியை சேர்ந்த ஆதித்தியன் (வயது 25) என்பவரை போலீசார் கைது செய்து, டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் டிப்பர் லாரி உரிமையாளர் மாங்காடு வாணியத்தெரு பகுதியை சேர்ந்த திருமேனி என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story