ரூ.1¼ லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல்


ரூ.1¼ லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல்
x

செய்யாறு அருகே ரூ.1¼ லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

திருவண்ணாமலை

செய்யாறு

வெம்பாக்கம் தாலுகா செய்யாறு அருகே அப்துல்லாபுரம் சோதனைச்சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது காஞ்சீபுரத்தில் இருந்து தூசி நோக்கி வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்டவை இருந்தது தெரிந்தது.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வந்து பிற மாவட்டங்களுக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தில் பிற பகுதிகளுக்கும் பதுக்கி வைத்து விற்பனைக்காக எடுத்து செல்வது தெரிய வந்தது.

இதையடுத்து செய்யாறு துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் உத்தரவின் பேரில் தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள குட்கா, கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் இது தொடர்பாக புஞ்சை அரசன் தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சலீம், சின்ன ஏழாச்சேரி கிராமத்தைச் சேர்ந்த செல்வம், காஞ்சீபுரம் மாவட்டம் எச்சூரை சேர்ந்த குரு அமரசேகர் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story