முந்திரி தோடு மூட்டைகள் பறிமுதல்


முந்திரி தோடு மூட்டைகள் பறிமுதல்
x

நெல்லையில் முந்திரி தோடு மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை பேட்டை பகுதியில் முறுக்கு தயார் செய்து விற்பனை செய்யும் ஒரு கடையில் முந்திரி தோடு மூலம் அடுப்பு எரிய வைக்கப்பட்டு வருகிறது என்று மாநகராட்சிக்கு புகார் வந்தது. மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவுப்படி சுகாதார பணியாளர்கள் அந்த கடையில் ஆய்வு செய்தனர்.

அப்போது அங்கு அடுப்பு எரிக்க வைக்கப்பட்டிருந்த முந்திரி தோடு மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் கடைக்காரரிடம் முந்திரி தோடு எரிப்பதால், அதன் மூலம் வெளியாகும் புகை, சாம்பல் பொதுமக்கள் கண்களில் பட்டு கண் எரிச்சல் ஏற்படும். எனவே 15 நாட்களுக்குள் கியாஸ் சிலிண்டர் அடுப்புக்கு மாற்றிவிடுகிறேன் என்று எழுதிவாங்கப்பட்டது.


Next Story