விசாரணை கைதியிடம் கஞ்சா பறிமுதல்


விசாரணை கைதியிடம் கஞ்சா பறிமுதல்
x

புதுக்கோட்டை சிறையில் விசாரணை கைதியிடம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை

தஞ்சை கரந்தை பகுதியை சோ்ந்தவர் நவீன் (வயது 22). இவர் ஒரு வழக்கு தொடர்பாக தஞ்சாவூர் தெற்கு போலீசாரால் கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் வழக்கு விசாரணைக்காக தஞ்சாவூர் கோர்ட்டில் நவீனை போலீசார் பாதுகாப்புடன் அழைத்து சென்று ஆஜர்படுத்தினர். பின்னர் மீண்டும் இரவு புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் புதுக்கோட்டை சிறையில் கைதிகளை சோதனையிடும் போது நவீனிடம் இருந்து 10 கிராம் கஞ்சாவை சிறை வார்டர்கள் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக புதுக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் ஜெயிலர் ரவி புகார் அளித்தார். அதன்பேரில் நவீன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story