அரிவாளை காட்டி மிரட்டி செல்போன் பறிமுதல்-3 பேர் கைது


அரிவாளை காட்டி மிரட்டி செல்போன் பறிமுதல்-3 பேர் கைது
x

அரிவாளை காட்டி மிரட்டி செல்போன் பறித்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

பேட்டை:

நெல்லையை அடுத்த பேட்டை சிதம்பரபுரத்தை சேர்ந்தவர் ஜான் பாண்டியன் மகன் கணேஷ் (வயது 24). இவர் பேட்டை அருகே சத்யா நகரில் உள்ள கனகராஜ் என்பவரின் பழைய பிளாஸ்டிக் கம்பெனியில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கணேஷ் மற்றும் வட மாநிலத்தைச் சேர்ந்த 3 கூலி தொழிலாளிகள் பேட்டை சத்யா நகர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது 2 மோட்டார்சைக்கிள்களில் வந்த 3 பேர் அரிவாள் மற்றும் கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்த நான்கு செல்போனை பறித்து அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து கணேஷ் பேட்டை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி வழக்குப்பதிவு செய்து செல்போனை பறித்துச் சென்ற பேட்டை எம்.ஜி.ஆர.் நகர் கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நாகராஜ் (27), முத்து என்ற முத்தார், (23) சுடலை (38) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.


Next Story