பட்டாசு, கருந்திரி பறிமுதல்


பட்டாசு, கருந்திரி பறிமுதல்
x

பட்டாசு, கருந்திரி பறிமுதல் செய்யப்பட்டது.

விருதுநகர்

தாயில்பட்டி,

ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள சல்வார்பட்டி ஊராட்சி அச்சங்குளம் பகுதியில் அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரிப்பதாக ஏழாயிரம்பண்ணை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செய்யது இப்ராஹிம் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அச்சங்குளத்தை சேர்ந்த பாண்டியன் (48) வீட்டின் அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 10 கிலோ சோல்சா வெடிகள், 20 கிலோ சரவெடிகள், 30 குரோஸ் கருந்திரிகள் மற்றும் மூலப் பொருட்களை பறிமுதல் செய்து அவரை போலீசார் கைது செய்தனர். அதேபோல வெம்பக்கோட்டை அருகே உள்ள அலமேலு மங்கைபுரத்தில் அனுமதியின்றி பட்டாசு திரிகள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் வெம்பக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றி முருகன் வீடுகளில் சோதனை நடத்தினார். அப்போது பெருமாள் சாமி (வயது 45) என்பவரது வீட்டில் இருந்த 30 கிலோ கருந்திரிகளை பறிமுதல் செய்து பெருமாள்சாமியை கைது செய்தனர்.


Next Story