10 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்
அரூர் நகரில் 10 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தர்மபுரி
அரூர்:
அரூர் நகரில் மீன் விற்பனை நிலையங்களில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பானு சுஜாதா தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கந்தசாமி, குமணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆத்தோர வீதி, வர்ண தீர்த்தம், திரு.வி.க. நகர் பகுதிகளில் மீன் விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்தனர். அப்போது கெட்டுப்போன 10 கிலோ மீன்களை பறிமுதல் செய்து அளித்தனர். மேலும் பழைய மீன்களை விற்கவோ, இருப்பு வைக்கவோ கூடாது. விற்பனையாளர்கள் உணவு பாதுகாப்பு துறை உரிமம் பெற்றிருக்க வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுஅறிவுறுத்தினர்.
Related Tags :
Next Story