கார்பைடு கல் வைத்து பழுக்க வைத்த மாம்பழங்கள் பறிமுதல்
திருப்பத்தூர் பகுதியில் கார்பைடு கல் வைத்து பழுக்க வைத்த மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பத்தூர் நகராட்சி மற்றும் கந்திலி ஒன்றிய பகுதிகளில் உள்ள 5 மாங்காய் மண்டிகள் மற்றும் 14 பழக்கடைகளில் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் பழனிச்சாமி திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது கார்பைடு கல் வைத்து பழுக்க வைத்த 30 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. மேலும் 2 கடைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 3 கடைகள் உணவு பாதுகாப்பு பதிவு சான்றிதழ் பெறாமல் இருந்தது தெரியவந்தை தொடர்ந்து அக்கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை பயன்படுத்திய 2 கடைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மாம்பழங்கள் இயற்கை முறையில் மட்டுமே பழுக்க வைக்க வேண்டும். செயற்கை முறையில் கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்ககூடாது எனவும், செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழத்தை சாப்பிட்டால் வாந்தி, பேதி, மயக்கம் போன்ற உடல் உபாதைகள் ஏற்படும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது.