மண் கடத்திய மினி டிப்பர் லாரி பறிமுதல்
ஜோலார்பேட்டை அருகே மண் கடத்திய மினி டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பத்தூர்
ஜோலார்பேட்டையை அடுத்த அச்சமங்கலம் பகுதியில் ஏரியில் முரம்பு மண் கடத்தப்படுவதாக ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அச்சமங்கலம் பகுதியில் இருந்து முரம்பு மண் ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த மினி டிப்பர் லாரியை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மண் கடத்தி வந்தது கீழ் அச்சமங்கலம் பகுதியை சேர்ந்த குமரன் (வயது 40) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து, மினி டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story