ரெயிலில் கடத்தப்பட்ட ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்
ரெயிலில் கடத்தப்பட்ட ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
வேலூர்
காட்பாடி
ரெயிலில் கடத்தப்பட்ட ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
வேலூர் பறக்கும் படை தனி தாசில்தார் கோடீஸ்வரன், ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ். மற்றும் பறக்கும் படை குழுவினர் இணைந்து காட்பாடி வழியாக பெங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் நேற்று சோதனை செய்தனர்.
அப்போது ரெயில் பெட்டிகளில் பயணிகள் இருக்கைகளின் கீழே பதுக்கி வைத்த 17 ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட சுமார் ஒரு டன் ரேஷன் அரிசி திருவலம் நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.
Related Tags :
Next Story