கருங்கலில் அதிக பாரம் ஏற்றிய லாரி பறிமுதல்
கருங்கலில் அதிக பாரம் ஏற்றிய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
கருங்கல்:
கருங்கலில் அதிக பாரம் ஏற்றிய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
கருங்கல் மானான்விளை பகுதியில் கல்குளம் தாலுகா சமூக பாதுகாப்பு திட்டம் தனி தாசில்தார் ரமேஷ் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக அதிக பாரம் ஏற்றி வந்த லாரியை தடுத்து நிறுத்தினர். பின்னர் எடை போடுவதற்காக லாரியுடன் உதவியாளர் அசோக்குமார் என்பவர் உடன் சென்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த லாரி டிரைவர், அசோக்குமாரை தகாத வார்த்தைகளால் பேசி அரசு பணி செய்யவிடாமல் தடுத்துள்ளார். இதுகுறித்து தனி தாசில்தார் ரமேஷ் கருங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் லாரியை போலீசார் பறிமுதல் செய்து லாரி உரிமையாளர் பாலப்பள்ளம் வெள்ளியாவிளை பகுதியைச் சேர்ந்த ஜில்ஜின் ராஜ் (வயது 44) மற்றும் லாரி டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.