பாலித்தீன் பைகள், புகையிலை பொருட்கள் பறிமுதல்


பாலித்தீன் பைகள், புகையிலை பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 20 Aug 2023 2:30 AM IST (Updated: 20 Aug 2023 2:31 AM IST)
t-max-icont-min-icon

கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த 17 கிலோ புகையிலை பொருட்கள், பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், பாலித்தீன் பைகள் விற்பனை செய்வதை தடுக்க, உணவு பாதுகாப்புத்துறையினர் சோதனை நடத்தும்படி கலெக்டர் பூங்கொடி உத்தரவிட்டார். இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட அலுவலர் கலைவாணி தலைமையிலான அலுவலர்கள் திண்டுக்கல், நத்தம் பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர். இதில், திண்டுக்கல் பகுதியில் 27 கடைகளிலும், நத்தம் பகுதியில் 10 கடைகளிலும் சோதனை நடத்தினர். அப்போது கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த 17 கிலோ புகையிலை பொருட்கள், பாலித்தீன் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக 4 கடைக்காரர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.


Next Story