எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு கடத்தப்பட்ட ரூ.5.35 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்
உடமைகளில் ஹெராயின் போதை பவுடர் மறைத்து வைத்து இருந்ததை கண்டு பிடித்தனர்
சென்னை,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் விமான பயணிகளை கண்காணித்தனர். அப்போது எத்தியோப்பியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர்.
அப்போது உகாண்டா நாட்டை சேர்ந்த 35 வயது பெண்னை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். மேலும் அவரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதையடுத்து அவரது உடமைகளை சோதனை செய்தனர். அப்போது உகாண்டா பெண் கொண்டு வந்த அட்டை பெட்டிகளை மோப்ப நாய் ஒரியோ சோதித்த போது மேத்தோ குயிலோன் போதை பொட்டலங்களாக மறைத்து வைத்து இருந்ததை கண்டு பிடித்தது. அதுப்போல் உடமைகளில் ஹெராயின் போதை பவுடர் மறைத்து வைத்து இருந்ததை கண்டு பிடித்தனர். ரூ. 5 கோடியே 35 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 196 கிராம் மேத்தோ குயிலோன், ஹெராயின் போதை பவுடரை பறிமுதல் செய்தனர். இவற்றை கடத்தி உகாண்டா நாட்டு பெண்ணை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள் யாருக்காக கடத்தி வந்தார். இதன் பிண்ணனியில் உள்ளவர்கள் யார்? சர்வதேச கடத்தல் கும்பலுக்கு தொடர்பு உள்ளதா? சென்னையில் உள்ள கடத்தல் போதை கும்பல் யார் என சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.