மாணவர்களை ஏற்றிச்செல்லும் பள்ளி வாகனங்கள் பறிமுதல்


மாணவர்களை ஏற்றிச்செல்லும் பள்ளி வாகனங்கள் பறிமுதல்
x

தகுதிச்சான்று இல்லாம்ல் மாணவர்களை ஏற்றிச்செல்லும் பள்ளி வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என கலெக்டர் அருண் தம்புராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாகப்பட்டினம்

தகுதிச்சான்று இன்றி மாணவர்களை ஏற்றி செல்லும் பள்ளி வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என கலெக்டர் அருண் தம்புராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பள்ளி வாகனங்கள் ஆய்வு

நாகை வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யும் பணி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில்

உதவி கலெக்டர் முருகேசன், துணை போலீஸ் சூப்பிரண்டு சவுந்தரராஜன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன், வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிசாமி, ஆய்வாளர் பிரபு ஆகியோர் கொண்ட குழுவினர் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர். இதில் 101 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

இதுகுறித்து கலெக்டர் அருண்தம்புராஜ் கூறியதாவது:-

அறிவுரை

பள்ளி வாகனங்களின் தரம் மற்றும் சான்றுகள் அனைத்தும் சரியாக இருக்கிறதா?, குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்து செல்லப்படும் அனைத்து வசதிகளும் இருக்கிறதா?, பள்ளி வாகனங்களில் தீயணைப்பு கருவி, முதலுதவி பெட்டி வைக்கப்பட்டுள்ளதா? அவசர கால கதவு உள்ளதா? இருக்கைகள், சக்கரங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

ஒரு சில வாகனங்களில் சிறு, சிறு குறைகள் கண்டறியப்பட்டன. இந்த வாகனங்கள் குறைகளை நிவர்த்தி செய்துவிட்டு, அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளன.

வாகனங்கள் பறிமுதல்

தீவிபத்து ஏற்பட்டால் அதனை கையாளும் முறை உள்ளிட்டவைகள் குறித்து பள்ளி வாகன டிரைவர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

மேலும் தகுதிச்சான்று இன்றி மாணவர்களை பள்ளி வாகனங்களில் ஏற்றிச்செல்வது கண்டறியப்பட்டால் அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

இந்த ஆய்வில் முறையான ஆவணங்கள் இல்லாத 7 வாகனங்களுக்கு தகுதிச்சான்று ரத்து செய்யப்பட்டுள்ளது.


Next Story