புகையிலை பொருட்கள் பறிமுதல்
புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாட்டகுளம் விளக்கு அருகே வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது. இதையடுத்து காரில் இருந்த புகையிலை பொருட்கள், ரூ.40 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்ததுடன் சிவகாசியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (வயது 29), சத்யராஜ் (27) ஆகிய 2 பேரையும் கைது செய்து, காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கிருஷ்ணன் கோவிலை சேர்ந்த கருப்பசாமி (23) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். புகையிலை பொருட்கள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது. எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்பது குறித்து கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.