புகையிலை பொருட்கள் பறிமுதல்
கேளூர் சந்தைமேட்டில் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவண்ணாமலை
கண்ணமங்கலம்
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின் பேரில் இன்று ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், கண்ணமங்கலம் இன்ஸ்பெக்டர் சாலமன்ராஜா, சந்தவாசல் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன், தனிப்பிரிவு போலீசார் ராஜ்குமார் மற்றும் போலீசார் கேளூர் சந்தைமேடு பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் சோதனை செய்தனர்.
அப்போது மணிகண்டன் என்பவரது கடையில் இருந்து 280 பாக்கெட் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.8 ஆயிரத்து 250 ஆகும்.
இது சம்பந்தமாக மணிகண்டனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story