காரில் கடத்திய புகையிலை பொருட்கள் பறிமுதல்


காரில் கடத்திய புகையிலை பொருட்கள் பறிமுதல்
x

வாலாஜாவில் காரில் கடத்திய புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

ராணிப்பேட்டை

வாலாஜாபேட்டை அணைக்கட்டு ரோடு மேம்பாலம் பகுதியில் வாலாஜா போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது மேம்பாலத்தின் கீழ் கார் ஒன்று நின்று கொண்டு இருந்தது. அதன் அருகே வாலிபர் ஒருவர் நடமாடிக் கொண்டிருந்தார். சந்தேகத்தின் பேரில் போலீசார் காரினை சோதனை செய்தனர். அதில் அரசால் தடை செய்யப்பட்ட 60 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களான குட்கா, பான் மசாலா மூட்டைகள் இருப்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து புகையிலை பொருட்களை காருடன் பறிமுதல் செய்து, அதை கடத்தி வந்ததாக வாலாஜாபஸ் நிலையம் பகுதியை சேர்ந்த மாலம்சிங் மகன் காலுசிங் (வயது 23) என்பவரை கைது செய்தனர்


Next Story