மோட்டார் சைக்கிளில் கடத்திய புகையிலை பறிமுதல்; 2 பேர் கைது


மோட்டார் சைக்கிளில் கடத்திய புகையிலை பறிமுதல்; 2 பேர் கைது
x

மோட்டார் சைக்கிளில் கடத்திய புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது.

விருதுநகர்

சிவகாசி

சிவகாசி உட்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகார்கள் மாவட்ட போலீஸ் நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர்கள் மூலம் அவ்வப்போது தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு தனஞ்செயன் உத்தரவின் பேரில் சிவகாசி டவுன் சிறப்பு இன்ஸ்பெக்டர் இலக்கியமுத்து மற்றும் போலீசார் சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் இரட்டைப்பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை தனியாக அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சிவகாசியில் என்.ஜி.ஓ காலனியை சேர்ந்த பியூஸ்குமார் (வயது 41), மதுரை மாவட்டம் பேரையூரை சேர்ந்த கோபி (25) என தெரிய வந்தது. இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் புகையிலை பொருட்களை சிவகாசிக்கு கடத்தி வந்தது தெரியவந்தது. கடத்திவரப்பட்ட புகையிலை பொருட்களையும் மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்து பியூஸ்குமார், கோபி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இந்த புகையிலை பொருட்கள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story