அனுமதியின்றி மண் ஏற்றி வந்த டிராக்டர் பறிமுதல்


அனுமதியின்றி மண் ஏற்றி வந்த டிராக்டர் பறிமுதல்
x

பரவாக்கோட்டையில் அனுமதியின்றி மண் ஏற்றி வந்த டிராக்டர் பறிமுதல் செய்யப்படடது.

திருவாரூர்

மன்னார்குடி:

மன்னார்குடியை அடுத்த பரவாக்கோட்டை மெயின் ரோட்டில் நேற்று முன்தினம் இரவு திருவாரூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரி பாலாஜி வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக டிராக்டரில் மண் ஏற்றி கொண்டு வந்தது. அதை நிறுத்தி சோதனை செய்த போது அனுமதியின்றி மண் ஏற்றி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து டிராக்டரையும், அதன்டிரைவர் பரவாக்கோட்டையை சேர்ந்த அருண் (வயது 19) என்பவரையும் பரவாக்கோட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அருணை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து டிராக்டரை பறிமுதல் செய்தனர்.


Next Story