மணல் கடத்திய லாரி பறிமுதல்


மணல் கடத்திய லாரி பறிமுதல்
x

பாளையங்கோட்டை அருகே மணல் கடத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருநெல்வேலி

நெல்லை:

பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் தலைமையிலான போலீசார். பாளையங்கோட்டை அருகே கீழப்பாட்டம் மணப்படைவீடு சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மணலுடன் லாரியை பறிமுதல் செய்த போலீசார், தப்பி ஓடிய லாரி டிரைவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story