அபராதத்தை செலுத்தாத 85 வாகனங்கள் பறிமுதல்


அபராதத்தை செலுத்தாத 85 வாகனங்கள் பறிமுதல்
x

தர்மபுரி நகரில் ஆன்லைன் மூலம் விதிக்கப்பட்ட அபராதத்தை செலுத்தாத 85 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

தர்மபுரி

தர்மபுரி நகரில் ஆன்லைன் மூலம் விதிக்கப்பட்ட அபராதத்தை செலுத்தாத 85 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

வாகனங்கள் பறிமுதல்

தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலை போக்குவரத்து விதிமுறைகளை மீறி இயக்கப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. விதிகளை மீறி இயக்கப்பட்ட வாகனங்களின் பதிவு எண்களை கண்டறிந்து போலீசார் ஆன்லைன் மூலம் அபராதம் விதித்து வருகிறார்கள். இதன்படி அபராதம் செலுத்தாத வாகனங்களை கண்டறியும் சோதனை தர்மபுரியில் துணை போலீஸ் சூப்பிரண்டு வினோத் மேற்பார்வையில் நடைபெற்றது.

போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், சின்னசாமி, ரகுநாதன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் தர்மபுரி நகரில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போக்குவரத்து விதி மீறலுக்காக ஆன்லைன் மூலம் விதிக்கப்பட்ட அபராதத்தை செலுத்தாத இருசக்கர வாகனங்கள், கார்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட 85 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இ-சேவை மையங்கள்

ஆன்லைன் மூலம் விதிக்கப்பட்ட அபராத தொகையை இ-சேவை மையங்களில் செலுத்த வேண்டும். அபராத தொகை செலுத்தியதற்கான ரசீதை போக்குவரத்து போலீசாரிடம் சமர்ப்பித்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை மீண்டும் எடுத்து செல்ல வேண்டும் என்று வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அறிவுறுத்தினர்.

சாலை போக்குவரத்து விதிகளை முழுமையாக தெரிந்து கொண்டு அவற்றை வாகன ஓட்டிகள் முறையாக கடைபிடிக்க வேண்டும். போக்குவரத்து விதிகளை மீறாமல் வாகனங்களில் செல்வதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும் என்று போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


Next Story