மாநில ஆக்கி போட்டிக்கு காரைக்குடி பள்ளி அணி தேர்வு
மாநில ஆக்கி போட்டிக்கு காரைக்குடி பள்ளி அணி தேர்வு செய்யப்பட்டது.
காரைக்குடி,
தமிழக பள்ளிக்கல்வித்துறை சாார்பில் குடியரசு தினவிழா ஆக்கி போட்டிகள் சிவகங்கை விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர், சிங்கம்புணரி, மானாமதுரை, இளையான்குடி ஆகிய குறு வட்டத்தை சேர்ந்த பள்ளிகள் கலந்துகொண்டு விளையாடியது. இதில் இறுதிபோட்டியில் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவில் காரைக்குடி அழகப்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணி, சிவகங்கை செயின்ட் ஜோசப் பள்ளி அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 2-வது முறையாக மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை அழகப்பா பள்ளி குழும தலைவர் ராமநாதன்வைரன், நிர்வாக அறங்காவலர் தேவிஅலுமேலுவைரவன், பள்ளி முதல்வர் நேரு, உடற்கல்வி ஆசிரியர்கள் ஹரிபிரசாத், சுகுமார், பாலமுருகன், ஒருங்கிணைந்த சிவகங்கை மாவட்ட ஆக்கி கழக நிர்வாகிகள், ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.