கோகோ போட்டிக்கு மாணவிகள் தேர்வு


கோகோ போட்டிக்கு  மாணவிகள் தேர்வு
x

கோகோ போட்டிக்கு மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

சிவகங்கை

காளையார்கோவில்,

பெண்களுக்கான கேலோ இந்தியா கோ கோ போட்டி வருகிற ஜூன் மாதம் 9-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை ஹரியானாவில் நடைபெற உள்ளது. இதற்கான தேர்வு சென்னையில் நடைபெற்றது. இதில் காளையார் கோவில் ஹோலி ஸ்பிரிட் பள்ளியை சேர்ந்த பிரியதர்ஷினி, ஸ்ரீ நிதி, பிரியதர்ஷினி, சோனா, ஜாய் நடாஷா ஆகியோர் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் தமிழக அணி சார்பாக விளையாட தகுதி பெற்று உள்ளனர். தேசிய போட்டிக்கு தேர்ச்சி பெற்ற மாணவிகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் , மாவட்ட விளையாட்டு ஆய்வாளர் ராமசாமி ,பள்ளி முதல்வர் கிரேசி சைமன், தாளாளர் லிடியா, உடற்கல்வி ஆசிரியர் ராஜா, பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


Next Story