கைப்பந்து போட்டிக்கு வீரர்கள் தேர்வு
கிருஷ்ணகிரியில் மாநில அளவிலான கைப்பந்து போட்டிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி
மாநில அளவிலான யூத் சாம்பியன்ஷிப் கைப்பந்து போட்டி ஆகஸ்டு 6-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடக்க உள்ளது. இதற்காக மாவட்ட அளவிலான வீரர், வீராங்கனை தேர்வு போட்டி கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில் 70 ஆண்கள், 30 பெண்கள் கலந்து கொண்டனர். 12 ஆண்களும், 12 பெண்களும், மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் தங்கமணி மற்றும் துணை செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில், பயிற்சியாளர்கள் சந்தோஷ், தமிழ், அருள் ஆகியோர் வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்தனர்.
Related Tags :
Next Story