ரூ.45 கோடியில் புதிய கட்டிடம் கட்ட இடம் தேர்வு
மயிலாடுதுறை மாவட்ட தலைமை ஆஸ்பத்திரிக்கு ரூ.45 கோடியில் புதிய கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது
மயிலாடுதுறை தனிமாவட்டமாக ஆனதையொட்டி அரசு பெரியார் ஆஸ்பத்திரி மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ரூ.45 கோடி மதிப்பீட்டில் 8 மாடிகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டுவதற்காக திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. அதற்கான நிதியையும் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தநிலையில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடந்தது. ராஜகுமார் எம்.எல்.ஏ., சுகாதாரத்துணை இணை இயக்குனர் குருநாதன்கந்தையா, தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் செந்தில்குமார், பொதுப்பணித்துறை கட்டிடம் உதவி செயற்பொறியாளர் ராமர் ஆகியோர் பார்வையிட்டு தற்போது ஆஸ்பத்திரி வளாகத்திலேயே உள்ள இடத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு இடத்திற்கு ஏற்றார் போல் வடிவமைக்கவும், பார்க்கிங் வசதி, ஆம்புலன்ஸ் வந்து செல்வதற்கான அனைத்து நவீன வசதிகளுடன் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதில் ரூ.36 கோடி மதிப்பீட்டில் 8 மாடி கட்டிடமும், ரூ.9 கோடி மதிப்பீட்டில் ஆஸ்பத்திரிக்கு உபகரணங்கள் வாங்குவதற்கு திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. இதில் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் திருமுருகன், கண்காணிப்பாளர் முத்துகுமரன், ஒன்றிய கவுன்சிலர் வடவீரபாண்டியன், மருந்துகிடங்கு அலுவலர் முரளி மற்றும் பலர் இருந்தனர்.